மேலும் செய்திகள்
ஹாரி கேன் சாதனை: ரொனால்டோவை முந்தினார்
27-Sep-2025
தெற்காசிய கால்பந்து: பைனலில் இந்தியா
25-Sep-2025
புட்சல்: இந்தியா முதல் வெற்றி
25-Sep-2025
மெஸ்ஸி மேஜிக்: மயாமி வெற்றி
21-Sep-2025
நியூ ஜெர்சி: கோபா அமெரிக்க கால்பந்து தொடரின் 'நாக் அவுட்' சுற்றுக்கு முன்னேறியது அர்ஜென்டினா. நேற்று நடந்த லீக் போட்டியில் சிலியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.அமெரிக்காவில் 'கோபா அமெரிக்கா' கால்பந்து தொடரின் 48 வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் நடப்பு சாம்பியன், உலகத் தரவரிசையில் 'நம்பர்-1' ஆக உள்ள அர்ஜென்டினா அணி, 40 வது இடத்திலுள்ள சிலியை எதிர்கொண்டது.போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் 55வது நிமிடத்தில் சிலி வீரர் கேபிரியல், முரட்டு ஆட்டம் ஆட, 'எல்லோ கார்டு' கிடைத்தது.கேப்டன் மெஸ்சி, அனுபவ கொன்சாலஸ் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் இருந்த போதும், கோல் அடிக்க முடியாமல் போராடியது அர்ஜென்டினா அணி. 78 வது நிமிடம் ரோட்ரிகோ கொடுத்த பந்தில் கோல் அடிக்க முயன்றார் அர்ஜென்டினா வீரர் மார்டினஸ். இதை சிலி கோல் கீப்பர் கிளாடியோ பிராவோ தடுத்து நிறுத்தினார். போட்டி முடிய 2 நிமிடம் இருந்த போது, அர்ஜென்டினா அணி வீரர் மார்டினஸ், பந்தை வலது காலால் உதைத்து கோலாக மாற்றினார். முடிவில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.2 போட்டியிலும் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி, 6 புள்ளியுடன் 'நாக் அவுட்' சுற்றுக்கு முன்னேறியது.கனடா கலக்கல்கன்சாஸ் நகரில் நேற்று நடந்த மற்றொரு போட்டியில் பெரு, கனடா அணிகள் மோதின. இரண்டாவது பாதியில் பெரு வீரர் மிகுயல் அராவ்ஜோ, கனடா வீரர் ஜேக்கப்பை 'பவுல்' செய்து, 'ரெட் கார்டு' பெற்று வெளியேறினார். 79 வது நிமிடம் கனடாவின் ஜேக்கப் உதவியில் ஜோனாதன் ஒரு கோல் அடிக்க, 1-0 என வெற்றி பெற்றது.
27-Sep-2025
25-Sep-2025
25-Sep-2025
21-Sep-2025