மேலும் செய்திகள்
ஹாரி கேன் சாதனை: ரொனால்டோவை முந்தினார்
27-Sep-2025
தெற்காசிய கால்பந்து: பைனலில் இந்தியா
25-Sep-2025
புட்சல்: இந்தியா முதல் வெற்றி
25-Sep-2025
மெஸ்ஸி மேஜிக்: மயாமி வெற்றி
21-Sep-2025
வடக்கு கரோலினா: கோபா அமெரிக்கா கால்பந்து அரையிறுதியில் கொலம்பிய அணி பைனலுக்கு முன்னேறியது. நேற்று உருகுவே அணியை 1-0 என வென்றது.அமெரிக்காவில் 'கோபா அமெரிக்கா' கால்பந்து தொடரின் 48 வது சீசன் நடக்கிறது. வடக்கு கரோலினாவில் நேற்று நடந்த அரையிறுதியில் உலகத் தரவரிசையில் 12வது இடத்திலுள்ள கொலம்பிய அணி, 14வதாக உள்ள உருகுவே அணியை சந்தித்தது. இத்தொடரில் அதிக கோப்பை வென்ற அணிகளில் அர்ஜென்டினாவுடன் (15), முதலிடத்தை பகிர்ந்து கொண்ட உருகுவே (15 முறை) வெற்றிக்கு போராடியது. 39வது நிமிடத்தில் கொலம்பியாவின் ரோட்ரிக்ஸ் அடித்த பந்தை, ஜெபர்சன் லெர்மா தலையால் முட்டி கோலாக மாற்றினார். கொலம்பியாவின் டேனியல் முனோஜ், முரட்டு ஆட்டம் ஆடியதால் 31வது, முதல் பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரம் (45+1 வது) என அடுத்தடுத்து இரண்டு முறை 'எல்லோ கார்டு' பெற்றார். இதையடுத்து 'ரெட் கார்டு' காட்டப்பட்டு, வெளியேற்றப்பட்டார். இரண்டாவது பாதியில் கொலம்பிய அணி 10 வீரர்களுடன் விளையாடியது. இருப்பினும் உருகுவே வீரர்களின் சவால்களை சமாளித்தது. 71வது நிமிடத்தில் உருகுவேயின் லுாயிஸ் சாரஸ் அடித்த பந்து, கோல் போஸ்ட்டில் பட்டுத் திரும்பியது. முடிவில் கொலம்பிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 2001க்குப் பின் (சாம்பியன்), மீண்டும் பைனலுக்கு முன்னேறியது.அர்ஜென்டினாவுடன் மோதல்கோபா கால்பந்து தொடரின் பைனல், ஜூலை 14ல் புளோரிடாவில் நடக்கவுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா-கொலம்பியா மோத உள்ளன.வீரர்கள்-ரசிகர்கள் மோதல்நேற்று போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் வார்த்தை மோதலில் இறங்கினர். அப்போது, கேலரியில் இருந்த கொலம்பிய ரசிகர்கள், உருகுவே வீரர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிலும் கையில் கிடைத்த பொருளை கொண்டு எறிய, போலீசார் தலையிட்டு சமாதானம் செய்தனர். உருகுவே கேப்டன் ஜோஸ் மரியா கூறுகையில்,'' புதிதாக பிறந்த குழந்தை உட்பட எங்கள் குடும்பத்தினர் கேலரியில் இருந்தனர். இவர்களை பாதுகாப்பதற்கு போலீசார் அங்கு இல்லை. வேறு வழியில்லாததால் நாங்கள் செல்ல நேர்ந்தது,'' என்றார்.
27-Sep-2025
25-Sep-2025
25-Sep-2025
21-Sep-2025