உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / சவுத்தர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் சாம்பியன் * லெஜண்டு லீக் கிரிக்கெட்டில்

சவுத்தர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் சாம்பியன் * லெஜண்டு லீக் கிரிக்கெட்டில்

ஸ்ரீநகர்: லெஜண்டு லீக் கிரிக்கெட் தொடரில் கேதர் ஜாதவின் சவுத்தர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி சாம்பியன் ஆனது. பைனலில் சூப்பர் ஓவரில் ஒடிசா அணியை வீழ்த்தியது.இந்தியாவில் லெஜண்டு லீக் 'டி-20' கிரிக்கெட் தொடர் நடந்தது. ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்றனர். ஸ்ரீநகரில் நடந்த பைனலில் கேதர் ஜாதவின் சவுத்தர்ன் சூப்பர் ஸ்டார்ஸ், இர்பான் பதானின் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு கப்டில் (27), மசகட்சா (83) கைகொடுக்க, 20 ஓவரில் 164/6 ரன் எடுத்தது. முனவீரா 4 விக்கெட் சாய்த்தார். பின் களமிறங்கிய ஒடிசா அணிக்கு யூசுப் பதான் (85) விளாச, 20 ஓவரில் 164/9 ரன் எடுத்தது. போட்டி 'டை' ஆனது.வெற்றியாளரை முடிவு செய்ய சூப்பர் ஓவர் நடந்தது. முதலில் களமிறங்கிய ஒடிசா அணி, ஒரு ஓவரல் 13 ரன் எடுத்தது. இலக்கைத் துரத்திய சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு கப்டில் 2 சிக்சர் விளாச, 0.5 ஓவரில் 14/1 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற சூப்பர் ஸ்டார்ஸ் அணி, சாம்பியன் ஆனது.37 ஆண்டுக்குப் பின்... ஸ்ரீநகரில்ஸ்ரீநகரில் கடைசியாக 1987ல் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடந்தது. 37 ஆண்டுக்குப் பின் மீண்டும் லெஜண்டு லீக் கிரிக்கெட் பைனல் இங்குள்ள பக் ஷி மைதானத்தில் நடந்தது. மொத்தம் 28,000 பேர் திரள, மைதானம் நிரம்பி வழிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை