மேலும் செய்திகள்
ஹாரி கேன் சாதனை: ரொனால்டோவை முந்தினார்
27-Sep-2025
தெற்காசிய கால்பந்து: பைனலில் இந்தியா
25-Sep-2025
புட்சல்: இந்தியா முதல் வெற்றி
25-Sep-2025
மெஸ்ஸி மேஜிக்: மயாமி வெற்றி
21-Sep-2025
ஸ்டட்கர்ட்: டென்மார்க், சுலோவேனியா அணிகள் மோதிய 'யூரோ' கால்பந்து போட்டி 'டிரா' ஆனது.ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நேற்று நடந்த 'யூரோ' கோப்பை கால்பந்து 'சி' பிரிவு லீக் போட்டியில், உலகின் 'நம்பர்-21' டென்மார்க் அணி, 57வது இடத்தில் உள்ள சுலோவேனியாவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் டென்மார்க்கின் கிறிஸ்டியன் எரிக்சன் ஒரு கோல் அடித்தார். இதற்கு, சுலோவேனியா அணியினரால் பதிலடி தர முடியவில்லை. முதல் பாதி முடிவில் டென்மார்க் அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட சுலோவேனியா அணிக்கு 77வது நிமிடத்தில் எரிக் ஜான்சா ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணியினால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என 'டிரா' ஆனது.
27-Sep-2025
25-Sep-2025
25-Sep-2025
21-Sep-2025