மேலும் செய்திகள்
ஹாரி கேன் சாதனை: ரொனால்டோவை முந்தினார்
27-Sep-2025
தெற்காசிய கால்பந்து: பைனலில் இந்தியா
25-Sep-2025
புட்சல்: இந்தியா முதல் வெற்றி
25-Sep-2025
மெஸ்ஸி மேஜிக்: மயாமி வெற்றி
21-Sep-2025
டார்ட்மண்ட்: 'யூரோ' கோப்பை கால்பந்து காலிறுதிக்கு ஜெர்மனி, இங்கிலாந்து அணிகள் முன்னேறின.ஜெர்மனியில், ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் ('யூரோ' கோப்பை) தொடர் நடக்கிறது. டார்ட்மண்ட் நகரில் நடந்த 'ரவுண்டு-16' போட்டியில் ஜெர்மனி, டென்மார்க் அணிகள் மோதின. முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.இரண்டாவது பாதியின் 53வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் லுாகாஸ் ஹவர்ட்ஸ் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய ஜெர்மனிக்கு 68வது நிமிடத்தில் ஜமால் முசியாலா ஒரு கோல் அடித்தார். இதற்கு டென்மார்க் அணியினரால் பதிலடி தர முடியவில்லை. முடிவில் ஜெர்மனி அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.பெர்லினில் நடந்த மற்றொரு 'ரவுண்டு-16' போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இத்தாலி அணி 0-2 என சுவிட்சர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியது.
மற்றொரு 'ரவுண்டு-16' போட்டியில் இங்கிலாந்து, சுலோவாகியா அணிகள் மோதின. இவான் ஷ்ரான்ஸ் (25வது நிமிடம்) ஒரு கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் சுலோவாகியா 1-0 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+5வது நிமிடம்) எழுச்சி கண்ட இங்கிலாந்து அணிக்கு ஜூட் பெல்லிங்ஹாம் கைகொடுத்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது. பின் இரு அணிகளுக்கும் தலா 15 நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் இங்கிலாந்தின் ஹாரி கேன் (91வது) ஒரு கோல் அடித்தார். முடிவில் இங்கிலாந்து 2-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. இதில் சுவிட்சர்லாந்தை சந்திக்கிறது.
27-Sep-2025
25-Sep-2025
25-Sep-2025
21-Sep-2025