உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / போர்ச்சுகல் அணி தகுதி * உலக கோப்பை கால்பந்துக்கு...

போர்ச்சுகல் அணி தகுதி * உலக கோப்பை கால்பந்துக்கு...

போர்டோ: அமெரிக்காவில் நடக்க உள்ள உலக கோப்பை கால்பந்து தொடருக்கு, ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி தகுதி பெற்றது. 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், 2026, ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. 48 அணிகள் பங்கேற்க உள்ளன. ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச்சுற்றில் 54 அணிகள் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டியில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணி உலக கோப்பை தொடருக்கு முன்னேறும். இதன் 'எப்' பிரிவு கடைசி லீக் போட்டி, போர்ச்சுகலின் போர்டோ நகரில் நடந்தது. போர்ச்சுகல், ஆர்மேனியா அணிகள் மோதின. அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 'ரெட் கார்டு' பெற்ற போர்ச்சுகல் அணி கேப்டன், கிறிஸ்டியானோ ரொனால்டோ, தடை காரணமாக இதில் பங்கேற்கவில்லை. இருப்பினும் போர்ச்சுகல் அணி 9-1 என வெற்றி பெற்றது. 6 போட்டியில் 4 வெற்றி, தலா ஒரு 'டிரா', தோல்வியுடன் 13 புள்ளி பெற்று, பட்டியலில் முதலிடம் பிடித்தது. உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. இத்தாலி ஏமாற்றம்இத்தாலியின் மிலன் நகரில் நடந்த 'ஐ' பிரிவு போட்டியில் இத்தாலி, 1-4 என நார்வேயிடம் வீழ்ந்தது. நார்வே (24 புள்ளி) உலக தொடருக்கு முன்னேறியது. உலக கோப்பை தொடரில் 4 முறை சாம்பியன் ஆன இத்தாலி, கடந்த 2018, 2022 ல் தகுதி பெறவில்லை. இம்முறை இத்தாலி (18) இரண்டாவது இடம் பிடித்து, 'பிளே ஆப்' சுற்றில் பங்கேற்க உள்ளது.ஆறாவது முறைஉலக கோப்பை கால்பந்து தொடரில் அதிக முறை பங்கேற்ற வீரர்களில் ஜெர்மனியின் மத்தாயஸ், மெக்சிகோவின் ரபேல் மார்குயஸ், அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, போர்ச்சுகலின் ரொனால்டோ என 4 வீரர்கள் முதலிடத்தில் உள்ளனர். இவர்கள் தலா 5 முறை பங்கேற்றனர். 2026ல் மெஸ்ஸி, ரொனால்டோ களமிறங்கும் பட்சத்தில், ஆறாவது முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்ற வீரர்கள் என சாதிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ