உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / சவுதி அரேபியாவில் உலக கால்பந்து * பிபா இன்று முடிவு

சவுதி அரேபியாவில் உலக கால்பந்து * பிபா இன்று முடிவு

ஜெனிவா: 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் வரும் 2034ல் சவுதி அரேபியாவில் நடக்கலாம்.சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சார்பில் நான்கு ஆண்டுக்கு ஒருமுறை உலக கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படுகிறது. கடைசியாக 2022ல் கத்தாரில் நடந்த தொடரில் மெஸ்சியின் அர்ஜென்டினா வென்றது. அடுத்து 2026ல் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கும். 2030 ல் ஸ்பெயின், மொரோக்கோ, போர்ச்சுகலில் நடக்க உள்ளன. அர்ஜென்டினா, பாராகுவே, உருகுவேயில் தலா ஒரு போட்டி நடக்கும்.2034ல் எங்கேஇன்று 2034ல் உலக கோப்பை தொடர் நடத்தும் இடம் குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது. ஜெனிவாவில் இன்று நடக்கும் கூட்டத்தில், 211 கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆன்லைன் வழியாக பங்கேற்பர். 2034 தொடர் ஆசியா அண்டு ஒசியானா நாடுகளில் மட்டும் நடக்கும் என 'பிபா' தலைவர் இன்பான்டினோ ஏற்கனவே அறிவித்தார். இதையடுத்து ஆசிய கால்பந்து கவுன்சில், சவுதி அரேபியாவுக்கு ஆதரவு தெரிவித்தது. ஆஸ்திரேலியா போட்டியில் இருந்து விலகியது.இதனால் ஓட்டெடுப்பு இல்லாமல், ஒரு மனதாக சவுதி அரேபியா தேர்வு செய்யப்பட உள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. புதிய மைதானம்மொத்தம் 104 போட்டிகளும் சவுதி அரேபியாவில் நடத்த திட்டமிடப் பட்டுள்ளன. இதற்காக 5 நகரங்களில் புதிதாக 8 மைதானம் கட்டப்பட உள்ளது. துவக்க போட்டிக்காக 92,000 பேர் அமரும் வகையில் ரியாத்தில் மைதானம் உருவாக உள்ளது. தவிர புதிய, மறுசீரமைப்பு ஓட்டல்கள், விமான நிலையங்கள், போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். 2022 உலக தொடருக்காக கத்தார் தயாரான போதும், ஆயிரக்கணக்கான பணியாளர்கள் மரணம், மனித உரிமை மீறல்கள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தன. தற்போது சவுதி அரேபியாவிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை