மேலும் செய்திகள்
ஹாரி கேன் சாதனை: ரொனால்டோவை முந்தினார்
27-Sep-2025
தெற்காசிய கால்பந்து: பைனலில் இந்தியா
25-Sep-2025
புட்சல்: இந்தியா முதல் வெற்றி
25-Sep-2025
மெஸ்ஸி மேஜிக்: மயாமி வெற்றி
21-Sep-2025
போர்டாக்ஸ்: பிரான்ஸ், கனடா அணிகள் மோதிய நட்பு கால்பந்து போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.ஜெர்மனியில், யூரோ கோப்பை கால்பந்து (ஜூன் 14 - ஜூலை 14) நடக்கவுள்ளது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கு தயாராகும் விதமாக ஒவ்வொரு அணிகளும் நட்பு ரீதியிலான போட்டிகளில் விளையாடுகின்றன. பிரான்சில் நடந்த போட்டியில் கனடா, பிரான் அணிகள் மோதின. இப்போட்டியில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்வே 20 நிமிடம் மட்டும் விளையாடினார். இப்போட்டி 0-0 என 'டிரா'வில் முடிந்தது.இத்தாலியில் நடந்த போட்டியில் இத்தாலி, போஸ்னியா அணிகள் மோதின. டேவிட் பிராட்டேசி (38வது நிமிடம்) கைகொடுக்க இத்தாலி அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஸ்லோவாகியாவில் நடந்த போட்டியில் ஸ்லோவாகியா அணி 4-0 என வேல்ஸ் அணியை வீழ்த்தியது. சொந்த மண்ணில் ஏமாற்றிய மான்டினேக்ரோ அணி 1-3 என ஜார்ஜியாவிடம் தோல்வியடைந்தது.
அமெரிக்காவில் கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் (ஜூன் 20 - ஜூலை 14) நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக சிகாகோவில் நடந்த நட்பு ரீதியிலான போட்டியில் அர்ஜென்டினா, ஈகுவடார் அணிகள் மோதின. ஏஞ்சல் டி மரியா (40வது நிமிடம்) கைகொடுக்க அர்ஜென்டினா அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
27-Sep-2025
25-Sep-2025
25-Sep-2025
21-Sep-2025