உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / உலக கோப்பையில் அர்ஜென்டினா * பெருவை வீழ்த்தி அபாரம்

உலக கோப்பையில் அர்ஜென்டினா * பெருவை வீழ்த்தி அபாரம்

பியுனஸ் ஏர்ஸ்: உலக கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்தது அர்ஜென்டினா அணி.அமெரிக்கா, கனடாவில் வரும் 2026ல் 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்று, உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. தென் அமெரிக்க அணிகளுக்கான தகுதிச் சுற்று போட்டி அர்ஜென்டினாவின் பியுனஸ் ஏர்சில் நடந்தது. இதில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, பெரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் 55வது நிமிடம் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி, பந்தை சக வீரர் மார்டினசிற்கு கொடுத்தார். இதைப் பெற்ற மார்டினஸ், அப்படியே வலைக்குள் தள்ள கோலாக மாற்றினார். இது இவர் அடித்த 32வது கோல். அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்த வீரர்களில் 'ஜாம்பவான்' மாரடோனா (32) எண்ணிக்கையை சமன் செய்தார். முடிவில் அர்ஜென்டினா அணி 1-0 என வெற்றி பெற்றது. பிரேசில், உருகுவே மோதிய போட்டி 1-1 என 'டிரா' ஆனது.தகுதி உறுதிதென் அமெரிக்க தகுதிச்சுற்றில் 10 அணிகள் மோதுகின்றன. இதில் 'டாப்-6' இடம் பெறும் அணிகள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறும். அர்ஜென்டினா அணி 12 போட்டியில் (மொத்தம் 18), 8 வெற்றி, ஒரு 'டிரா', 3 தோல்வி என 25 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இன்னும் 6 போட்டி மட்டும் மீதமுள்ள நிலையில், ஏறக்குறைய 'டாப்-6' இடத்தை உறுதி செய்து, உலக கோப்பை வாய்ப்பை தக்க வைத்தது.அடுத்த ஐந்து இடங்களில் உருகுவே (20), ஈகுவடார் (19), கொலம்பியா (19), பிரேசில் (18), பராகுவே (17) உள்ளன.கேரளா வருகிறார் மெஸ்சிஉலக சாம்பியன் அர்ஜென்டினா அணி, கேரளாவில் நட்பு கால்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளது. கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான் கூறுகையில்,'' உலகின் 'நம்பர்-1' கால்பந்து அணி, மெஸ்சி இடம் பெற்ற அர்ஜென்டினா. அடுத்த ஆண்டு கேரளா வந்து விளையாட உள்ளது. இப்போட்டிக்கு தேவையான நிதி உதவியை கேரள அரசு வழங்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை