மேலும் செய்திகள்
ஆசிய கால்பந்து போட்டியில் இந்தியா கோல் மழை
03-Jul-2025
சிட்னி: பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன், 2026, மார்ச் 1-26ல் ஆஸ்திரேலியாவில் (12 அணிகள்) நடக்கவுள்ளது. நடப்பு சாம்பியன் சீனா, தென் கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா என 4 அணிகள் நேரடியாக பங்கேற்கின்றன. இதற்கான தகுதிச்சுற்றில் அசத்திய இந்திய அணி, முதன் முறையாக ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.மொத்தம் 12 அணிகள் தலா 4 கொண்ட 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' அணிகளுடன், இரண்டாவது இடம் பெற்ற சிறந்த 2 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இதன்படி, காலிறுதிக்கு செல்லும் 8 அணிகள், 2027ல் பிரேசிலில் நடக்க உள்ள 'பிபா' பெண்கள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.இதற்கான அட்டவணை தேர்வு நேற்று சிட்னியில் நடந்தது. உலகத் தரவரிசையில் 70வது இடத்திலுள்ள இந்திய பெண்கள் அணி 'சி' பிரிவில் இடம் பெற்றது. 2011ல் உலக கோப்பை வென்ற, 2014, 2018ல் ஆசிய சாம்பியன் ஆன உலகின் 'நம்பர்-7' ஜப்பான், வியட்நாம் (37), சீன தைபே (42) என வலுவான அணிகள் இதில் உள்ளன.இந்திய அணி தனது முதல் போட்டியில் 2026, மார்ச் 4ல் வியட்நாம் அணியை சந்திக்க உள்ளது. மார்ச் 7ல் ஜப்பான், மார்ச் 10ல் சீன தைபேவுடன் மோத உள்ளது.
03-Jul-2025