உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / கால்பந்து: இந்திய அணிக்கு ரூ. 43 லட்சம்

கால்பந்து: இந்திய அணிக்கு ரூ. 43 லட்சம்

புதுடில்லி: ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூ. 43 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன், 2026, மார்ச் 1-26ல் ஆஸ்திரேலியாவில் (12 அணிகள்) நடக்கவுள்ளது. நடப்பு சாம்பியன் சீனா, தென் கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா என 4 அணிகள் நேரடியாக பங்கேற்கின்றன. மீதமுள்ள 8 அணிகளை தேர்வு செய்ய, தகுதிச்சுற்று நடக்கிறது.இந்திய அணி 'பி' பிரிவில் தாய்லாந்து, மங்கோலியா, ஈராக், திமோர்-லெஸ்தே அணிகளுடன் இடம் பெற்றது. முதல் 3 போட்டியில் வென்ற இந்தியா, கடைசி போட்டியில் தாய்லாந்தை சாய்த்தது. 12 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, முதன் முறையாக ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. இத்தொடரில் மொத்தம் 24 கோல் அடித்தது. எதிரணிகள் தரப்பில் 1 கோல் மட்டும் அடிக்கப்பட்டன. இதையடுத்து, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில் இந்திய பெண்கள் அணிக்கு ரூ. 43 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஐ.எப்.எப்., தலைவர் கல்யாண் சவுபே கூறுகையில்,'' ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது சாதாரணமாக வந்துவிடவில்லை. நீண்ட கால திட்ட அடிப்படையில் இந்த வெற்றி கிடைத்துள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை