மெஸ்சி வருகை ரத்து
திருவனந்தபுரம்: ''மெஸ்சி, அர்ஜென்டினா அணி வீரர்கள் கேரளா வருவதற்கு அனுமதி கிடைத்துள்ளது,'' எனஉலக கால்பந்தின் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி. கடந்த 2022ல் கத்தாரில் நடந்த பைனலில் பிரான்சை வீழ்த்தி, மூன்றாவது முறையாக உலக கோப்பை வென்றது அர்ஜென்டினா (1978, 1986, 2022). இதையடுத்து கேப்டன் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, இந்தியாவில் (கேரளா) நட்பு போட்டியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது.வரும் அக்டோபரில் இப்போட்டி நடக்கும் என கேரளா விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான் தெரிவித்தார். ஆனால் அர்ஜென்டினா அணி, 'அக்டோபர் மாதம் சீனாவில் நட்பு போட்டியில் பங்கேற்க உள்ளோம். 2026, மார்ச் மாதம் கேரளா வருகிறோம்,' என தெரிவித்துள்ளது.இதை ஏற்க கேரள அரசு மறுத்துள்ளது. இதனால் மெஸ்சி வருகை ரத்து செய்யப்பட்டது. அப்துரஹிமான் கூறுகையில்,'' அர்ஜென்டினா அணி கேரளா வருவதற்கு தேவையான நிதி, அவர்களுக்கு மாற்றப்பட்டுவிட்டது. இப்போது, மாநில அரசுடன் செய்த ஒப்பந்தத்தை மீறி, 2026ல் வருவதாக சொல்கின்றனர். இதனால் ஏற்படும் நிதி இழப்புக்கு அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்,'' என்றார்.