உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / இந்தியா-மாலத்தீவு மோதல் * பெண்கள் கால்பந்தில்...

இந்தியா-மாலத்தீவு மோதல் * பெண்கள் கால்பந்தில்...

புதுடில்லி: இந்தியா, மாலத்தீவு பெண்கள் அணிகள் 2 நட்பு போட்டியில் மோத உள்ளன.இந்திய பெண்கள் கால்பந்து அணி, கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் நடந்த தெற்காசிய சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றது. இதன் அரையிறுதியில் நேபாளத்திடம் தோற்று திரும்பியது.தற்போது உலகத் தரவரிசையில் 69 வது இடத்திலுள்ள இந்திய பெண்கள் அணி, 163 வதாக உள்ள மாலத்தீவு அணியுடன் இரண்டு நட்பு போட்டியில் பங்கேற்க உள்ளது. இப்போட்டி பெங்களூருவில் உள்ள படுகோன்-டிராவிட் மையத்தில் நடக்க உள்ளது.இதுகுறித்து அகில இந்திய கால்பந்து சங்கம் வெளியிட்ட செய்தியில்,'' இந்தியா, மாலத்தீவு அணிகள் வரும் 30, 2025, ஜன. 2ல் பெங்களூருவில் நடக்கும் நட்பு போட்டியில் பங்கேற்க உள்ளன,' என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை