உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / இந்தியா-ரஷ்யா மோதல் * நட்பு கால்பந்தில்...

இந்தியா-ரஷ்யா மோதல் * நட்பு கால்பந்தில்...

புதுடில்லி: தெற்காசிய பெண்களுக்கான (20 வயதுக்குட்பட்ட) கால்பந்து சாம்பியன்ஷிப் வரும் ஜூலை 1-11 ல் வங்கதேசத்தில் நடக்க உள்ளது. தவிர 2026ல் பெண்களுக்கான ஏ.எப்.சி., ஆசிய கோப்பை தகுதிச்சுற்று நடக்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் இந்திய பெண்கள் அணி பல்வேறு தொடர்களில் பங்கேற்கிறது. இதன் ஒரு பகுதியாக, துருக்கி சென்று மூன்று போட்டிகளில் நட்பு போட்டிகளில் பங்கேற்க உள்ளது. தற்போது பெங்களூரு பயிற்சி முகாமில் உள்ள இந்திய அணி, அடுத்த மாதம் துருக்கி (அன்டல்யா) செல்கிறது. இங்கு பிப். 19ல் ஜோர்டானை சந்திக்கும். அடுத்து பிப். 22ல் ஹாங்காங், பிப். 25ல் ரஷ்யாவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Gurumoorthy
ஜன 28, 2025 10:02

இந்திய அணி... இன்று மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று இந்தத் தொடரை கைப்பற்ற வேண்டும்.. வாழ்த்துக்கள்


சமீபத்திய செய்தி