சிறந்த வீரர் மெஸ்சி
மாட்ரிட்: கால்பந்து வரலாற்றில் அனைத்து காலத்திலும் சிறந்த வீரராக மெஸ்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஸ்பெயினில் இருந்து வெளியாகும் கால்பந்து பத்திரிகை 'மார்கா'. இதன் சார்பில் கால்பந்து உலகின் 'டாப்-6' வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு வீரர்களின் செயல்பாடு, வென்ற கோப்பை உள்ளிட்ட விஷயங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. முடிவில் அனைத்து காலத்திலும் சிறந்த கால்பந்து வீரராக அர்ஜென்டினாவின் மெஸ்சி தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது.மெஸ்சி தனது கால்பந்து வாழ்க்கையில் இதுவரை ஒரு உலக கோப்பை (2022, அர்ஜென்டினா), இரண்டு 'கோபா அமெரிக்கா' (2021, 2024, அர்ஜென்டினா), மூன்று 'கிளப்' உலக கோப்பை (2009, 2011, 2015, பார்சிலோனா), நான்கு சாம்பியன்ஸ் லீக் (2005-06, 2008-09, 2010-11, 2014-15, பார்சிலோனா) உட்பட மொத்தம் 46 கோப்பை வென்றுள்ளார். போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இரண்டாவது இடம் பிடித்தார். பிரேசில் ஜாம்பவான், மறைந்த பீலேவுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது.'டாப்-6' வீரர்கள்மெஸ்சி/அர்ஜென்டினாரொனால்டோ/போர்ச்சுகல்பீலே/பிரேசில்ஸ்டெபானோ/அர்ஜென்டினாமாரடோனா/அர்ஜென்டினாகிரப்/நெதர்லாந்து