உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / ஐ-லீக் கால்பந்து: பெங்களூரு வெற்றி

ஐ-லீக் கால்பந்து: பெங்களூரு வெற்றி

பெங்களூரு: 'ஐ-லீக்' கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி 2-0 என, ஷில்லாங் அணியை வீழ்த்தியது.இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில் 'ஐ-லீக்' கால்பந்து 18வது சீசன் நடக்கிறது. பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, ஷில்லாங் லஜோங் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பெங்களூரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெங்களூரு சார்பில் கிளாரன்ஸ் சவியோ பெர்ணான்டஸ் (24வது நிமிடம்), ஜோர்டான் லமேலா காரிடோ (49வது) தலா ஒரு கோல் அடித்தனர்.பஞ்சாப்பில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் டில்லி, இன்டர் காஷி அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய டில்லி அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இன்டர் காஷி அணிக்கு நிக்கோலா ஸ்டோஜனோவிச் (77வது நிமிடம்) ஒரு கோல் அடித்து கைகொடுத்தார்.இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் இன்டர் காஷி அணி 16 போட்டியில், 8 வெற்றி, 4 'டிரா', 4 தோல்வி என 28 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் சர்ச்சில் பிரதர்ஸ் அணி (29 புள்ளி) உள்ளது. நான்காவது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி (17 புள்ளி) 10வது இடத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ