உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அபாரம்

கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அபாரம்

கோல்கட்டா: ஐ.டபிள்யு.எல்., கால்பந்து தொடரில் ஈஸ்ட் பெங்கால் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கார்வல் அணியை வென்றது. இந்தியாவில் பெண்களுக்கான கால்பந்து லீக் (ஐ.டபிள்யு.எல்.,) தொடர் நடக்கிறது. ஈஸ்ட் பெங்கால், தமிழகத்தின் சேது (மதுரை), கோகுலம் கேரளா உட்பட மொத்தம் 8 கிளப் அணிகள் பங்கேற்கின்றன.நேற்று மூன்றாவது சுற்று போட்டிகள் நடந்தன. மேற்கு வங்கத்தில் நடந்த போட்டியில், ஈஸ்ட் பெங்கால், டில்லியின் கார்வல் அணிகள் மோதின. இதில் ஈஸ்ட் பெங்கால் அணி 2-1 என வெற்றி பெற்றது. ஈஸ்ட் பெங்கால் அணிக்கு சுலஞ்ஜனா (22), பஜிலா (63) தலா ஒரு கோல் அடித்தனர். கார்வல் அணிக்கு மோனிஷா (72) ஆறுதல் தந்தார்.கோல்கட்டாவில் நடந்த போட்டியில் நீடா (ஒடிசா), கர்நாடகாவின் கிக்ஸ்டார்ட் அணிகள் மோதின. கடந்த போட்டியை போல மீண்டும் மிரட்டிய நீடா அணி வீராங்கனை பியாரி (2, 31, 76), மீண்டும் 'ஹாட்ரிக்' கோல் அடித்து கைகொடுத்தார். முடிவில் நீடா அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.மதுரையின் சேது, கோகுலம் கேரளா அணிகள் மோதிய போட்டி 1-1 என 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் ஸ்ரீபூமி அணி 1-0 என சேசா அணியை வீழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ