இன்டர்கான்டனென்டல் கால்பந்து: இந்தியா ஏமாற்றம்
ஐதராபாத்: ஐதராபாத்தில், 'இன்டர்கான்டினென்டல்' கோப்பை கால்பந்து 4வது சீசன் நடந்தது. இந்தியா, சிரியா, மொரிஷியஸ் என மூன்று அணிகள் பங்கேற்றன. மொரிஷியசுக்கு எதிரான போட்டியை 'டிரா' செய்த இந்தியா, நேற்று சிரியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 0-3 என தோல்வியடைந்தது.லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த சிரியா (6 புள்ளி) முதன்முறையாக கோப்பை வென்றது. மொரிஷியஸ் 2வது இடம் பிடித்தது. இரண்டு முறை (2018, 2023) கோப்பை வென்ற இந்தியாவுக்கு 3வது இடமே கிடைத்தது.