ஐ.எஸ்.எல்., கால்பந்து: சென்னை அணி ஏமாற்றம்
கொச்சி: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் ஏமாற்றிய சென்னை அணி 0-3 என, கேரளாவிடம் வீழ்ந்தது.இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. கேரள மாநிலம் கொச்சியில் நடந்த லீக் போட்டியில் கேரளா, சென்னை அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. சொந்த மண்ணில் இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட கேரளா அணிக்கு ஜீசஸ் ஜிமினெஸ் (56வது நிமிடம்), நோவா சதாவுயி (70வது), பிரவீன் (90+2வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். கடைசி நிமிடம் வரை போராடிய சென்னை அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.ஆட்டநேர முடிவில் சென்னை அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. சென்னை அணி, 9 போட்டியில், 3 வெற்றி, 3 'டிரா', 3 தோல்வி என 12 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டது. கேரளா அணி 11 புள்ளிகளுடன் (3 வெற்றி, 2 'டிரா', 4 தோல்வி) 8வது இடத்துக்கு முன்னேறியது.