உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / ஐ.எஸ்.எல்., கால்பந்து: சென்னை அணி வெற்றி

ஐ.எஸ்.எல்., கால்பந்து: சென்னை அணி வெற்றி

சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் சென்னை அணி 2-1 என, பஞ்சாப்பை வீழ்த்தியது.இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. சென்னை அணிக்கு கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் வில்மர் ஜோர்டான் (19வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார்.இரண்டாவது பாதியில் பஞ்சாப் அணிக்கு லுாகா மஜ்சென் (48வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். இதற்கு, சென்னை அணியின் டேனியல் சிமா (84வது) ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.முடிவில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.சென்னை அணி, இதுவரை விளையாடிய 21 போட்டியில், 6 வெற்றி, 6 'டிரா', 9 தோல்வி என, 24 புள்ளிகளுடன் 10வது இடத்தில் நீடிக்கிறது. பஞ்சாப் அணி (24 புள்ளி, 7 வெற்றி, 3 'டிரா', 10 தோல்வி) 9வது இடத்தில் தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ