உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / கால்பந்து: சபாஷ் ஜாம்ஷெட்பூர்

கால்பந்து: சபாஷ் ஜாம்ஷெட்பூர்

கோவா: கோவா அணிக்கு எதிரான ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டி, ஜாம்ஷெட்பூர் அணி 2-1 என 'திரில்' வெற்றி பெற்றது. இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் 11வது சீசன் நடக்கிறது. நேற்று கோவாவில் நடந்த லீக் போட்டியில் கோவா, ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. போட்டியின் துவக்கத்தில் இருந்தே கோவா வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். போட்டியின் 23 வது நிமிடம் முரட்டுத் தனமாக விளையாடிய ஜாம்ஷெட்பூர் வீரர் தச்சிகவாவுக்கு 'எல்லோ கார்டு' கிடைத்தது. 43 வது நிமிடத்தில் சக வீரர் சவுரவ் தாஸ் கொடுத்த பந்தை வாங்கினார் ஜாம்ஷெட்பூர் அணி கேப்டன் ஜாவி ஹெர்ணான்டஸ். நீண்ட துாரத்தில் இருந்து தனது இடது காலால் அடித்த பந்து, கோவா கோல் போஸ்ட்டை விட்டு விலகிச் சென்றது.முதல் பாதியில் ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோவா வீரர் ராவ்லின் போர்கஸ் பந்தை ஆர்மண்டோ சாதிக்குவிற்கு 'பாஸ்' செய்தார். இதை அப்படியே அடித்து கோலாக மாற்றினார் சாதிகு. இரண்டாவது பாதியில் 74 வது நிமிடம் ஜாம்ஷெட்பூர் வீரர் ஜாவி சிவரியோவை, கோவா கோல் ஏரியாவுக்குள் வைத்து 'பவுல்' செய்தார் ஒடெய். இதனால் ஜாம்ஷெட்பூர் அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு தரப்பட்டது. இதில் சிவரியோ கோல் அடிக்க ஸ்கோர் 1-1 என சமன் ஆனது. போட்டியின் கடைசி நிமிடத்தில் முர்ரே (90+3வது) ஒரு கோல் அடிக்க, 2-1 என ஜாம்ஷெட்பூர் அணி 'திரில்' வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை