உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / களத்தில் சரிந்த இத்தாலி வீரர்

களத்தில் சரிந்த இத்தாலி வீரர்

புளோரன்ஸ்: இத்தாலியில், 'சீரி ஏ' கால்பந்து தொடர் நடக்கிறது. புளோரன்ஸ் நகரில் நடந்த லீக் போட்டியில் பியோரென்டினா, இன்டர் மிலன் அணிகள் மோதின.ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் 'வார்' தொழில்நுட்ப சோதனை செய்யப்பட்டதால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது பியோரென்டினா அணியின் இத்தாலி வீரர் எடோர்டோ போவ் 22, தனது 'ஷூ லேஸ்' கட்டுவதற்காக கீழே குணிந்த போது மைதானத்தில் சரிந்து விழுந்தார். மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின் 'ஆம்புலன்ஸ்' மூலம் புளோரன்ஸ் நகரில் உள்ள மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போவிற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மயக்கத்தில் உள்ள போவ், ஆம்புலன்சில் அழைத்து வந்த போது எவ்வித மருத்துவ உபகரணமின்றி சுயமாக சுவாசிக்க முடிந்ததாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு போவிற்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது.இப்போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. போவ் விரைவில் மீண்டு வர அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி