உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / ஆஸி., கால்பந்தில் மேட்ச் பிக்சிங் * ஐந்து வீரர்கள் மீது புகார்

ஆஸி., கால்பந்தில் மேட்ச் பிக்சிங் * ஐந்து வீரர்கள் மீது புகார்

சிட்னி: ஆஸ்திரேலிய கால்பந்தில் 'மேட்ச் பிக்சிங்' சர்ச்சை வெடித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஆண்களுக்கான 'ஏ-லீக்' கால்பந்து தொடர் நடந்தது. இதில் சென்டிரல் கோஸ்ட் மரினெர்ஸ் அணி சாம்பியன் ஆனது. நியூ சவுத் வேல்சில் உள்ள தென் மேற்கு சிட்னியை சேர்ந்த மக்கார்துர் அணி, ஐந்தாவது இடம் பிடித்தது. இந்த அணியினர் 'மேட்ச் பிக்சிங்' செய்வதாக சந்தேகம் ஏற்ப, நியூ சவுத் வேல்ஸ் போலீசார், பிரிட்டன் அதிகாரிகள் உதவியுடன் விசாரித்தனர்.முடிவில், தங்கள் அணி ஆதரவாளர்கள் நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் வகையில் செயல்பட்ட கேப்டன் டேவிலா, வீரர்கள் கிளேடன் லீவிஸ், பக்காஸ் என மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இவர் கடந்த டிச. 9ல் சிட்னி அணிக்கு எதிரான போட்டியில் 'எல்லோ கார்டு' பெறும் வகையில் விளையாடி, பணம் பெற்றாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர கடந்த ஏப். 20, மே 4ல் இதுபோல 'எல்லோ கார்டு' பெற முயற்சித்துள்ளனர். இதனிடையே இவ்விவகாரத்தில் மேலும் இரு வீரர்கள் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கால்பந்து ஆஸ்திரேலியா வெளியிட்ட செய்தியில்,' இந்த 'மேட்ச் பிக்சிங்' பிரச்னையை நாங்கள் சீரியசாக எடுத்துக் கொள்கிறோம். சம்பந்தப்பட்ட நிர்வாகத்துடன் இணைந்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்,' என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை