உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது ஒடிசா: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் ஏமாற்றம்

பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது ஒடிசா: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் ஏமாற்றம்

புதுடில்லி: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் ஏமாற்றிய ஒடிசா அணி 1-2 என பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்தது.இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. டில்லியில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், ஒடிசா அணிகள் மோதின. ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் பஞ்சாப் அணியின் சுதீஷ் ஒரு கோல் அடித்தார். இதற்கு ஒடிசா அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் பஞ்சாப் அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.இரண்டாவது பாதியின் 89வது நிமிடத்தில் பஞ்சாப் அணியின் அகஸ்டின் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+6வது நிமிடம்) பஞ்சாப் கோல்கீப்பர் குமார் 'சேம்சைடு' கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் பஞ்சாப் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் கேரளாவை வீழ்த்திய பஞ்சாப் அணி, தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை