மேலும் செய்திகள்
ஹாரி கேன் சாதனை: ரொனால்டோவை முந்தினார்
27-Sep-2025
தெற்காசிய கால்பந்து: பைனலில் இந்தியா
25-Sep-2025
புட்சல்: இந்தியா முதல் வெற்றி
25-Sep-2025
மெஸ்ஸி மேஜிக்: மயாமி வெற்றி
21-Sep-2025
புதுடில்லி: பெண்களுக்கான தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் அரையிறுதிக்கு ஹரியானா, மணிப்பூர் அணிகள் முன்னேறின.இந்தியாவில் சீனியர் பெண்களுக்கான 28 வது தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இரண்டாவது கட்ட பைனல் சுற்றில் 12 அணிகள், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.நேற்று நடந்த 'பி' பிரிவு போட்டியில் ஹரியானா, மணிப்பூர் அணிகள் மோதின. இதில் ஹரியானா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் ஒடிசா அணி 4-1 என்ற கோல் கணக்கில் சிக்கிமை வீழ்த்தியது. ஜார்க்கண்ட் அணி 3-1 என்ற கணக்கில் மஹாராஷ்டிராவை வென்றது.லீக் சுற்று முடிவில் 'பி' பிரிவில் ஹரியானா (13 புள்ளி), மணிப்பூர் (12) அணிகள் முதல் இரு இடம் பிடித்து, அரையிறுதிக்கு முன்னேறின. நாளை நடக்கும் அரையிறுதியில் தமிழகம்-மணிப்பூர், ஹரியானா-மேற்கு வங்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
27-Sep-2025
25-Sep-2025
25-Sep-2025
21-Sep-2025