உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / ஸ்பெயின், அமெரிக்கா தங்கம்: பாரிஸ் ஒலிம்பிக் கால்பந்தில்

ஸ்பெயின், அமெரிக்கா தங்கம்: பாரிஸ் ஒலிம்பிக் கால்பந்தில்

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் கால்பந்தில் ஸ்பெயின், அமெரிக்க அணிகள் தங்கம் வென்றன.பாரிஸ் ஒலிம்பிக்கில் நடந்த ஆண்களுக்கான கால்பந்து பைனலில் ஸ்பெயின், பிரான்ஸ் அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி 3-3 என சமநிலை வகித்தது. பின் இரு அணிகளுக்கும் தலா 15 நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் 2 கோல் அடித்த ஸ்பெயின் அணி, 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2வது முறையாக (1992, 2024) தங்கப்பதக்கம் வென்றது. இதன்மூலம் 32 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் அரங்கில் ஆண்களுக்கான கால்பந்து போட்டியில் ஐரோப்பிய அணிக்கு தங்கம் கிடைத்தது. கடைசியாக 1992ல் நடந்த பார்சிலோனா ஒலிம்பிக்கில் ஸ்பெயின் அணி தங்கம் வென்றிருந்தது.* ஆண்களுக்கான வெண்கலப் பதக்கப் போட்டியில் மொராக்கோ, எகிப்து அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த மொராக்கோ 6-0 என வெற்றி பெற்று வெண்கலம் வென்றது. இது, ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் மொராக்கோவுக்கு கிடைத்த முதல் பதக்கம் ஆனது.* பெண்களுக்கான வெண்கலப் பதக்க போட்டியில் ஸ்பெயின், ஜெர்மனி மோதின. இதில் ஜெர்மனி அணி 1-0 என வெற்றி பெற்று வெண்கலத்தை கைப்பற்றியது. * பெண்களுக்கான பைனலில் அமெரிக்கா, பிரேசில் அணிகள் மோதின. இதில் அமெரிக்க அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 5வது முறையாக (1996, 2004, 2008, 2012, 2024) தங்கம் வென்றது. பிரேசில் அணி 3வது முறையாக (2004, 2008, 2024) வெள்ளி வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை