மேலும் செய்திகள்
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
புதுடில்லி: உலக பாரா தடகளத்தில் இந்தியாவின் சிம்ரன், நவ்தீப், பிரீத்தி வெள்ளி வென்றனர்.டில்லியில், மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாராட தடகள சாம்பியன்ஷிப் நடந்தது. பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் ('டி12') பைனலில், பந்தய துாரத்தை 24.46 வினாடியில் கடந்த இந்தியாவின் சிம்ரன் சம்ரா, வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, இம்முறை இவர் கைப்பற்றிய 2வது பதக்கம். ஏற்கனவே இவர், 100 மீ., ஓட்டத்தில் ('டி12') தங்கம் வென்றிருந்தார்.பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் ('டி35') பைனலில் இலக்கை 14.33 வினாடியில் கடந்த இந்தியாவின் பிரீத்தி பால் வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இம்முறை 200 மீ., ஓட்டத்தில் ('டி35') வெண்கலம் வென்ற இவர், உலக தடகளத்தில் தனது 4வது பதக்கத்தை பெற்றார். கடந்த ஆண்டு 100, 200 மீ., ஓட்டத்தில் தலா ஒரு வெண்கலம் கைப்பற்றி இருந்தார்.ஆண்களுக்கான ஈட்டி எறிதல் ('எப்41') பைனலில் இந்தியாவின் நவ்தீப் சிங், அதிகபட்சமாக 45.46 மீ., எறிந்து வெள்ளி வென்றார். இது, உலக தடகளத்தில் இவரது 2வது பதக்கம் ஆனது. கடந்த ஆண்டு வெண்கலம் வென்றிருந்தார்.ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் ('டி44') பைனலில் இந்தியாவின் சந்தீப், இலக்கை 23.60 வினாடியில் கடந்து வெண்கலம் வென்றார்.போட்டி நிறைவு: உலக பாரா தடகளம் நிறைவு பெற்றது. இம்முறை இந்தியாவுக்கு 6 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கலம் என, மொத்தம் 22 பதக்கம் கிடைத்தது. உலக பாரா தடகள வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவுக்கு 20 பதக்கங்களுக்கு மேல் கிடைத்துள்ளது. இதற்கு முன், கடந்த ஆண்டு ஜப்பானில் நடந்த போட்டியில் 17 பதக்கம் (6 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம்) வென்றிருந்தது.
02-Oct-2025