உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / தங்கம் வென்றார் ஆதர்ஷ் சிங்: தேசிய துப்பாக்கி சுடுதலில்

தங்கம் வென்றார் ஆதர்ஷ் சிங்: தேசிய துப்பாக்கி சுடுதலில்

புதுடில்லி: தேசிய துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஆதர்ஷ் சிங் தங்கம் வென்றார்.டில்லியில், தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 67வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான 25 மீ., 'ஸ்டேன்டர்ட் பிஸ்டல்' பிரிவு பைனலில் ஆதர்ஷ் சிங் 583 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். உதய்வீர் சித்து (576 புள்ளி), ஓம்கார் சிங் (576) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர். மற்றொரு வீரர் குர்பிரீத் சிங் 4வது இடம் பிடித்தார்.ஜூனியர் ஆண்களுக்கான 25 மீ., 'ஸ்டேன்டர்ட் பிஸ்டல்' பிரிவில் அபினவ் சவுத்தரி (575 புள்ளி), சுராஜ் சர்மா (572), முகேஷ் (568) முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனர்.ஜூனியர் ஆண்களுக்கான 25 மீ., 'ஸ்போர்ட்ஸ் பிஸ்டல்' பிரிவில் முதல் மூன்று இடங்களை முகேஷ் (588), அபினவ் சவுத்தரி (587), சுராஜ் சர்மா (587) கைப்பற்றினர்.ஆண்களுக்கான 50 மீ., 'பிரீ பிஸ்டல்' பிரிவில் பிரஷாந்த் குமார் (556 புள்ளி) தங்கம் வென்றார். அமன்பிரீத் சிங் (555), சரப்ஜோத் சிங் (554) முறையே வெள்ளி, வெண்கலத்தை தட்டிச் சென்றனர்.பெண்களுக்கான 50 மீ., 'பிரீ பிஸ்டல்' பிரிவில் சைன்யம் (548), சிம்ரன்பிரீத் கவுர் பிரார் (545), நேஹா (543) முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ