உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / வில்வித்தை: பைனலில் இந்தியா

வில்வித்தை: பைனலில் இந்தியா

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஆசிய கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 போட்டி நடக்கிறது. ஜூனியர் காம்பவுண்டு பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் குஷால் தலால், 714 புள்ளி எடுத்து முதலிடம் பிடித்தார். ஒட்டுமொத்தமாக இந்திய கலப்பு அணி 1420 புள்ளி எடுத்து உலக சாதனை படைத்தது.பெண்கள் பிரிவில் ஷண்முகி, தேஜல், தனிஷ்கா ஜோடி தகுதிச்சுற்றில் மொத்தம் 2101 புள்ளி எடுத்து உலக சாதனை படைத்தது. அடுத்து நடந்த ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் வங்கதேசத்தின் ஹிமு பச்சாரை சந்தித்தார். இதில் சிறப்பாக செயல்பட்ட குஷால், 147-143 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில், தகுதிச்சுற்றில் 10 வது இடம் பிடித்த இந்தியாவின் சச்சின் சேச்சி, ஆஸ்திரேலியாவின் ஜோஷுவா பெரேராவிடம் வீழ்ந்தார். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சச்சின், ஹிமு மோத உள்ளனர்.பெண்கள் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஷண்முகி, 145-139 என இந்தோனேஷியாவின் யூரிகே நினா போனிதாவை சாய்த்து, பைனலுக்குள் நுழைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !