இந்தியாவுக்கு இரண்டு தங்கம் * ஆசிய பாரா வில்வித்தையில்...
பாங்காங்க்: ஆசிய பாரா வில்வித்தையில் இந்தியாவுக்கு இரண்டு தங்கப்பதக்கம் கிடைத்தன.தாய்லாந்தில் ஆசிய பாரா கோப்பை உலக ரேங்கிங் தொடர் நடக்கிறது. 'ரீகர்வ்' அணிகளுக்கான பைனலில், பாரிஸ் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் ஹர்விந்தர் சிங், தன்னா ராம் ஜோடி, இந்தோனேஷியாவின் ஹோலிடின், செடியவான் ஜோடியை சந்தித்தது. நான்கு செட் முடிவில் போட்டி 4-4 என சமன் ஆனது. பின் நடந்த 'ஷூட் ஆப்' முடிவில் இந்தியா 17-16 என வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது.'ரீகர்வ்' பெண்கள் அணிகளுக்கான பைனலில் இந்தியாவின் பூஜா ஜத்யன், பூஜா நரா ஜோடி, தாய்லாந்தின் பட்டவயோ, நம்பெட் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 0-6 என தோற்று, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது.பெண்கள் அபாரம்பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவு பைனலில் இந்தியாவின் சரிதா, ஜோதி ஜோடி, சீன தைபேவின் லீ யுன், வாங் ஹிசின் ஜோடியை எதிர்கொண்டது. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி முதல் இரு செட்டை (36-32, 36-34) வென்றது. தொடர்ந்து கடைசி இரு செட்டையும் (36-33, 38-34) கைப்பற்றியது. முடிவில் இந்திய ஜோடி 146-133 என வென்று, தங்கப்பதக்கம் வசப்படுத்தியது.ஆண்கள் காம்பவுண்டு பிரிவு பைனலில் இந்தியாவின் ஷ்யாம் சுந்தர், ராகேஷ் குமார் ஜோடி 149-150 என, தாய்லாந்து ஜோடியிடம் போராடி தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.