உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / பைனலில் இந்திய ஜோடி * உலக பாரா வில்வித்தையில்...

பைனலில் இந்திய ஜோடி * உலக பாரா வில்வித்தையில்...

குவாங்ஜு: தென் கொரியாவின் குவான்ஜு நகரில் உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான காம்பவுண்டு இரட்டையர் பிரிவு போட்டி நடந்தன. இதற்கான தகுதிச்சுற்றில் நான்காவது இடம் பெற்ற இந்தியாவின் ஷீத்தல் தேவி, சரிதா ஜோடி, நேரடியாக காலிறுதியில் பங்கேற்றது. இதில் 5வது இடம் பிடித்த இத்தாலியின் சார்தி, பிக்கி ஜோடியை 154-150 என்ற கணக்கில் வீழ்த்தியது.அடுத்து நடந்த அரையிறுதியில் இந்திய ஜோடி, 'நம்பர்-1' இடம் பிடித்த பிரிட்டனின் போபே பைன், ஜெசிக்கா ஜோடியை எதிர்கொண்டது. துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி 152-150 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. உலக சாம்பியன்ஷிப் பெண்களுக்கான காம்பவுண்டு அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தது.ஆண்கள் இரட்டையர் காம்பவுண்டு பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ராகேஷ் குமார், தோமன் குமார் ஜோடி 150-152 என கனடாவின் டேனியல், டிரம்லே ஜோடியிடம் தோல்வியடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை