மேலும் செய்திகள்
உலக வில்வித்தை: அரையிறுதியில் அபிஷேக்
11-Apr-2025
வில்வித்தை: இந்தியா 'வெண்கலம்'
10-Apr-2025
புளோரிடா: உலக கோப்பை வில்வித்தை பைனலுக்கு இந்திய கலப்பு ஜோடி முன்னேறியது.அமெரிக்காவில் உலக கோப்பை வில்வித்தை ('ஸ்டேஜ் 1') தொடர் நடக்கிறது. கலப்பு இரட்டையர் காம்பவுண்டு பிரிவில் இந்தியாவின் ஜோதி, ரிஷாப் யாதவ் ஜோடி களமிறங்கியது. முதல் சுற்றில் 156-149 என ஸ்பெயினை வென்று காலிறுதிக்கு முன்னேறியது. இதில் 156-154 என டென்மார்க்கை வீழ்த்தியது. அரையிறுதியில் இந்திய அணி 159-155 என சுலோவேனியாவை வென்று, பைனலுக்குள் நுழைந்தது. இதில் சீன தைபேவை சந்திக்கிறது.தனிநபர் ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் திராஜ் பொம்மதேவரா, முதல் மூன்று சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். இதில் பிரான்சின் தாமசை 6-4 என வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார்.
11-Apr-2025
10-Apr-2025