உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஆசிய கூடைப்பந்து: பிரதான சுற்றில் இந்தியா

ஆசிய கூடைப்பந்து: பிரதான சுற்றில் இந்தியா

சிங்கப்பூர் சிட்டி: ஆசிய கோப்பை கூடைப்பந்து பிரதான சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியது.சிங்கப்பூரில், ஆசிய கோப்பை கூடைப்பந்து (3x3) தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 'பி' பிரிவு தகுதிச்சுற்று கடைசி போட்டியில் இந்தியா, பிலிப்பைன்ஸ் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய இந்தியா 21-11 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு ஹர்ஷ் தாகர் (10 புள்ளி), பிரனவ் பிரின்ஸ் (6), குஷால் சிங் (3), அரவிந்த் முத்து (2) கைகொடுத்தனர்.முதலிரண்டு போட்டியில் தென் கொரியா, மக்காவ் அணிகளை வீழ்த்திய இந்தியா, 'பி' பிரிவில் முதலிடம் பிடித்து 2 ஆண்டுகளுக்கு பின் பிரதான சுற்றுக்குள் நுழைந்தது. இதில் 'பி' பிரிவில் இந்திய அணி, சீனா, சீனதைபே அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. கடைசியாக 2023ல் பிரதான சுற்றில் பங்கேற்றது இந்தியா.பெண்களுக்கான 'பி' பிரிவு தகுதிச் சுற்று 2வது போட்டியில் இந்தியா, சீனதைபே அணிகள் மோதின. இதில் இந்திய அணி 13-17 என தோல்வியடைந்தது. அடுத்து நடந்த கடைசி போட்டியில் எழுச்சி கண்ட இந்தியா 21-12 என குவாம் அணியை வீழ்த்தி, ஆறுதல் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் ஹாங்காங்கிடம் வீழ்ந்த இந்தியா, 'பி' பிரிவில் 3வது இடம் பிடித்து பிரதான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ