மேலும் செய்திகள்
ஆசிய ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா
01-Dec-2024
மஸ்கட்: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி பைனலில் இந்திய பெண்கள் அணி 3-2 என 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் சீனாவை வீழ்த்தி, 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டது.ஓமன் தலைநகர் மஸ்கட்டில், பெண்களுக்கான ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி 9வது சீசன் நடந்தது. பைனலில் இந்தியா, சீனா அணிகள் மோதின. ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் சீனாவுக்கு கிடைத்த 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பில் கேப்டன் ஜின்சுவாங் டான் ஒரு கோல் அடித்தர்.இந்திய அணிக்கு 41வது நிமிடத்தில் கனிகா சிவாச் ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது.வெற்றியாளரை தீர்மானிக்க போட்டி 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் சாக்சி ராணா, இஷிகா, சுனேலிதா கோல் அடித்தனர். இந்திய அணி தொடர்ச்சியாக 2வது முறையாக (2023, 2024) கோப்பை வென்றது.
01-Dec-2024