உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / தமிழகத்தின் பரனிகா புதிய வரலாறு: போல் வால்ட்டில் முதல் பதக்கம்

தமிழகத்தின் பரனிகா புதிய வரலாறு: போல் வால்ட்டில் முதல் பதக்கம்

நகோயா: ஆசிய விளையாட்டு போல் வால்ட் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார் தமிழகத்தின் பரனிகா. நேற்று பெண்களுக்கான போல் வால்ட் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் தமிழகத்தின் பரனிகா இளங்கோவன், சிந்து ஸ்ரீ (கர்நாடகா) பங்கேற்றனர். துவக்கத்தில் 3.85, 4.00 மீ., தாவினார் பரனிகா. அடுத்து 4.15 மீ., உயரத்தை, இரண்டாவது வாய்ப்பில் தாவினார். மறுபக்கம் கஜகஸ்தானின் போலினா இவனோவாவும், இரண்டாவது வாய்ப்பில் 4.15 மீ., தாவினார். அடுத்து 4.25 மீ., உயரத்தை மூன்று முறை முயற்சித்தும், பரனிகா, போலினா என இருவராலும் தாவ முடியவில்லை.இதையடுத்து வெண்கலப் பதக்கத்தை முடிவு செய்ய 'டை பிரேக்கர்' நடக்க இருந்தது. ஆனால் இருவரும் வெண்கலப் பதக்கத்தை பகிர்ந்து கொள்ள சம்மதித்ததால், 'டை பிரேக்கர்' நடத்தப்படவில்லை. ஜப்பானின் மிசாகி (4.55), சீனாவின் சுங்கே (4.50) தங்கம், வெண்கலப் பதக்கம் வென்றனர். விவசாய குடும்பம்தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம் (குத்தாலம்) விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் பரனிகா, 29. தனது 6 வயதில் தடகளத்தில் இறங்கினார். துவக்கத்தில் நீளம் தாண்டுதல், 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் பங்கேற்றார். கல்லுாரியில் (எத்திராஜ், சென்னை) சேர்ந்த பிறகு, போல் வால்ட்டுக்கு மாறினார். கடந்த மார்ச் மாதம் நடந்த உள்ளரங்கு போட்டியில் 4.22 மீ., உயரம் தாவி, தேசிய சாதனை படைத்தார். தற்போது ஆசிய விளையாட்டு போல் வால்ட்டில் பதக்கம் வென்ற முதல் இந்தியரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ