மேலும் செய்திகள்
குல்வீர் சிங் நான்காவது இடம்
13-Jul-2025
நொடேசியா: போலந்தில் வைஸ்லா மெமோரியல் சர்வதேச தடகள போட்டி நடந்தது. ஆண்களுக்கான 'டெகாத்லான்' (மொத்தம் 10) போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் ஷங்கர் களமிறங்கினார். 400 மீ., ஓட்டம் (48.87 வினாடி), வட்டு எறிதல் (38.85 மீ.,), நீளம் தாண்டுதல் (7.57 மீ.,), 100 மீ., ஓட்டம் (11.02 வினாடி), போல் வால்ட் (4.10 மீ.,), 1500 மீ., ஓட்டம் (4 நிமிடம், 31.80 வினாடி) என 6 போட்டிகளில் தனது முந்தைய சாதனையை முறியடித்தார்.ஒட்டுமொத்தமாக 7826 புள்ளி எடுத்த தேஜஸ்வின், 4 வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார். இருப்பினும் டெகாத்லான் போட்டியில் 7800 க்கும் மேல் புள்ளி எடுத்த முதல் இந்தியர் என வரலாறு படைத்தார். தவிர, இது புதிய தேசிய சாதனை ஆனது. இதற்கு முன் 7666 புள்ளி எடுத்ததே அதிகம். செக் குடியரசின் கோபெக்கி (8254), ஸ்டிராஸ்கி (8136), எஸ்தோனியாவின் ரிஸ்டோ (8107) முதல் மூன்று இடம் பிடித்தனர்.
13-Jul-2025