உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஆசிய கூடைப்பந்து * இந்திய அணி ஏமாற்றம்

ஆசிய கூடைப்பந்து * இந்திய அணி ஏமாற்றம்

தோஹா: ஆசிய கூடைப்பந்து தகுதிச்சுற்றில் இந்திய அணி, கத்தாரிடம் தோல்வியடைந்தது.ஆசிய கோப்பை கூடைப்பந்து தொடர், வரும் ஆக. 5-17ல் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன. இதில் இந்திய அணி 'ஈ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. தனது ஆறாவது, கடைசி போட்டியில் இந்திய அணி, கத்தாருடன் மோதியது. தோகாவில் நடந்த இப்போட்டியில் இந்திய அணி துவக்கத்தில் 18-17 என முந்தியது. அடுத்து இந்திய வீரர்கள் ஏமாற்றினர். முடிவில் இந்திய அணி 61-81 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.6 போட்டியில் 1 வெற்றி, 5 தோல்வியுடன் இந்திய அணி 7 புள்ளி பெற்று, மூன்றாவது இடம் பிடித்தது. முதல் இரு இடம் பிடித்த ஈரான், கத்தார் அணிகள் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றன. இதில் இந்திய அணி 'எச்' பிரிவில் ஈராக், பஹ்ரைனுடன் இடம் பெற்றுள்ளது. 'டாப்-2' இடம் பிடித்தால், ஆசிய கோப்பை தொடருக்கு முன்னேறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை