உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / சென்னை இரண்டாவது வெற்றி * அல்டிமேட் டேபிள் டென்னிசில்

சென்னை இரண்டாவது வெற்றி * அல்டிமேட் டேபிள் டென்னிசில்

சென்னை: சென்னையில், அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 5வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் சென்னை, புனே அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் சென்னை வீரர் சரத்கமல்-அங்கூர் பட்டாசார்ஜீ மோதினர். இதில் 3-0 என (11-7, 11-6, 11-2) சரத்கமல் வெற்றி பெற்றார்.பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் சென்னையின் பொய்மன்தீ 3-0 (11-10, 119, 11-10) என புனேயின் ஆயிஹிகா முகர்ஜியை வென்றார்.கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் சென்னை அணியின் சரத், சகுரா ஜோடி, 3-0 என புனேயின் அனிர்பன் கோஷ், நடாலியா பஜோர் ஜோடியை சாயத்தது. அடுத்து நடந்த ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது போட்டியில் சென்னையின் ஜூல்ஸ் ரோலண்டு, 2-1 என மான்டெய்ரோவை வென்றார்.முடிவில் சென்னை அணி 12-3 என்ற கணக்கில் இத்தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை