உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / அர்ஜுனை வென்றார் அரவிந்த் * சென்னை செஸ் தொடரில்...

அர்ஜுனை வென்றார் அரவிந்த் * சென்னை செஸ் தொடரில்...

சென்னை: சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் அர்ஜுனை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார் அரவிந்த் சிதம்பரம்.சென்னையில் கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் இரண்டாவது, சாலஞ்சர் தொடரின் முதல் சீசன், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடக்கிறது. ஆறாவது சுற்று நேற்று நடந்தன. இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, சக வீரர் அரவிந்த் சிதம்பரம் மோதினர். உலகின் 'நம்பர்-2' வீரர் அர்ஜுன் எளிதாக வெல்வார் என நம்பப்பட்டது. மாறாக கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய அர்ஜுன், 48 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். மற்ற 3 போட்டிகள் 'டிரா' ஆகின. ஆறு சுற்று முடிவில் அமெரிக்காவின் ஆரோனியன் (4.0), அர்ஜுன் (4.0), அரவிந்த் (3.5) 'டாப்-3' ஆக உள்ளனர்.பிரனவ் 'டிரா'சாலஞ்சர் பிரிவில் இந்தியாவின் பிரனவ்-பிரனேஷ் மோதிய போட்டி 'டிரா' ஆனது. வைஷாலி, அபிமன்யுவிடம் தோல்வியடைந்தார். லியான், சக வீரர் கார்த்திகேயனை வென்றார். ஆறு சுற்று முடிவில் பிரனவ் (5.0), லியான் (4.5), ரவுனக் (3.5) 'டாப்-3' இடத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ