கார்த்திகேயன் முரளி அபாரம் * சென்னை சாலஞ்சர் செஸ் தொடரில்...
சென்னை: சென்னை சாலஞ்சர் செஸ் தொடரின் ஐந்தாவது சுற்றில் இந்தியாவின் கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றார்.சென்னையில் கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் இரண்டாவது, சாலஞ்சர் தொடரின் முதல் சீசன், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடக்கிறது. நேற்று, ஐந்தாவது சுற்று நடந்தன. இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஈரானின் பர்ஹாம் மோதிய போட்டி 'டிரா' ஆனது.அரவிந்த் சிதம்பரம், விதித் குஜ்ராத்தி தங்களது போட்டிகளை 'டிரா' செய்தனர். ஐந்து சுற்று முடிவில் அர்ஜுன் 4.0 புள்ளியுடன் முதலிடத்தில் தொடர்கிறார். அமெரிக்காவின் ஆரோனியன் (3.5), அமின் (3.0) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.கார்த்திகேயன் வெற்றிசாலஞ்சர் பிரிவில் இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி, சக வீரர் அபிமன்யுவை வீழ்த்தினார். பிரனவ்-ரவுனக், வைஷாலி-ஹரிகா, பிரனேஷ்-லியான் மோதிய மற்ற போட்டிகள் 'டிரா' ஆகின.ஐந்து சுற்று முடிவில் பிரனவ் (4.5), லியான் (3.5), ரவுனக் (3.0) 'டாப்-3' இடத்தில் உள்ளனர். கார்த்திகேயன் (2.5) 5வது இடத்துக்கு முன்னேறினார்.