உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / சென்னை செஸ்: ஹரிகா ஏமாற்றம்

சென்னை செஸ்: ஹரிகா ஏமாற்றம்

சென்னை: சென்னையில், கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. நேற்று ஐந்தாவது சுற்று போட்டிகள் நடந்தன. மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன், சக வீரர் பிரனவை சந்தித்தார். துவக்கத்தில் முன்னிலை பெற்ற அர்ஜுன், 78 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். இந்தியாவின் நிஹால் சரின்-அவாண்டர் (அமெரிக்கா), இந்தியாவின் விதித் குஜ்ராத்தி-வின்சென்ட் (ஜெர்மனி), இந்தியாவின் கார்த்திகேயன் முரளி-அனிஷ் கிரி (நெதர்லாந்து) மோதிய போட்டிகள் 'டிரா' ஆகின. நெதர்லாந்தின் வான் பாரீஸ்ட், அமெரிக்காவின் ராப்சனை வென்றார். 5 சுற்று முடிவில் வின்சென்ட் (4.0), அர்ஜுன் (3.0), வான் பாரீஸ்ட் (3.0), அனிஷ் கிரி (2.5) முதல் 4 இடத்தில் உள்ளனர்.சாலஞ்சர்ஸ் பிரிவு 10 இந்திய நட்சத்திரங்கள் விளையாடுகின்றனர். ஐந்தாவது சுற்றில் வைஷாலி, ஹர்ஷவர்தனை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி, 55வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.மற்றொரு போட்டியில் ஹரிகா, அபிமன்யுவிடம் வீழ்ந்தார். இனியன்-திப்தயன், ஆர்யன்-அதிபன் பாஸ்கரன், லியான்-பிரனேஷ் மோதிய போட்டிகள் 'டிரா' ஆகின. அபிமன்யு (4.5), பிரனேஷ் (3.5), திப்தயன் (3.5) 'டாப்-3' இடத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி