செஸ்: தங்கம் வென்றார் திவி * ஜூனியர் உலக கோப்பையில்...
பதுமி: சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் ஜார்ஜியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான 'பிடே' உலக கோப்பை செஸ் தொடர் நடந்தது. 8, 10, 12 வயதுக்கு உட்பட்ட என மொத்தம் 6 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.பெண்களுக்கான 12 வயது பிரிவில் 90 பேர் பங்கேற்றனர். இந்தியாவின் திவி பிஜேஷ், மொத்தம் 11 சுற்றில் 9.0 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த உலக 'கேடட் அண்டு யூத் ரேபிட் செஸ் தொடரில் சாம்பியன் ஆன தமிழகத்தின் ஷர்வானிகா (8.0) இம்முறை 5வது இடம் பிடித்தார்.10 வயது ஓபன் பிரிவில் இந்தியாவின் சர்பர்தோ மானி (8.5), சாத்வித் சவின் (8.5) என இருவரும் வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்றனர். 8 வயது பெண்கள் பிரிவில் இந்தியாவின் சயாஸ்தா சிங் (8.5) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.