செஸ்: கார்ல்சன் சாம்பியன்
பாரிஸ்: 'பிரீஸ்டைல்' கிராண்ட்ஸ்லாம் செஸ் தொடரில் மாக்னஸ் கார்ல்சன் சாம்பியன் ஆனார். பிரான்சின் பாரிசில் 'பிரீஸ்டைல்' கிராண்ட்ஸ்லாம் செஸ் தொடர் 2 வது சீசன் நடந்தது. உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, விதித் குஜ்ராத்தி உள்ளிட்டோர், லீக் சுற்றுடன் வெளியேறினர். அடுத்து நடந்த காலிறுதியில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி தோல்வியடைந்தார். இதன் பைனலில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா மோதினர். இதன் முதல் போட்டியில் வென்ற கார்ல்சன் 1.0-0 என முன்னிலையில் இருந்தார். நேற்று இரண்டாவது போட்டி நடந்தது. இதில் 'டிரா' செய்தால் போதும் என்ற நிலையில் கார்ல்சன், கருப்பு நிற காய்களுடன் விளையாடினார்.இப்போட்டி, 41வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. கார்ல்சன் 1.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார்.