உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்தியா எட்டாவது வெற்றி * செஸ் ஒலிம்பியாட்டில் அபாரம்

இந்தியா எட்டாவது வெற்றி * செஸ் ஒலிம்பியாட்டில் அபாரம்

புடாபெஸ்ட்: செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணி எட்டாவது வெற்றி பெற்றது.ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் செஸ் ஒலிம்பியாட் தொடர் 45வது சீசன் நடக்கிறது. ஓபன் பிரிவு எட்டாவது சுற்றில் இந்திய அணி, ஈரானுடன் மோதியது. இந்தியா சார்பில் குகேஷ், அர்ஜுன், பிரக்ஞானந்தா, விதித் குஜ்ராத்தி களமிறங்கினர். முதலில் பிரக்ஞானந்தா, ஈரானின் அமின் மோதிய போட்டி டிரா ஆனது. அடுத்து அர்ஜுன், பர்தியாவை வீழ்த்த, குகேஷ் தன் பங்கிற்கு பர்ஹாமை சாய்த்தார். மற்றொரு இந்திய வீரர் விதித் குஜ்ராத்தி, இடானியை வென்றார். முடிவில் இந்திய அணி 3.0-1.0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.இத்தொடரில் தொடர்ந்து 8வது வெற்றி பெற்ற இந்திய அணி 16 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. உஸ்பெகிஸ்தான் (14), ஹங்கேரி (14) அடுத்த இரண்டு இடங்களில் உள்ளன. பெண்கள் ஏமாற்றம்இந்திய பெண்கள் அணி 8வது சுற்றில், போலந்தை எதிர்கொண்டது. இந்தியாவின் வைஷாலி, தனது போட்டியில் தோல்வியடைய, மற்றொரு போட்டயில் திவ்யா, வெற்றி பெற்றார். ஹரிகாவும் தோற்க, இந்திய அணி 1.0-2.0 என பின்தங்கியது. மறுபக்கம் வந்திகா அலிக்ஜாவுக்கு எதிரான வெற்றிக்கு அருகில் சென்றார். கடைசி நேரத்தில் சற்று ஏமாற்றிய இவர், வேறு வழியின்றி போட்டியை 'டிரா' செய்தார்.முடிவில் இந்திய பெண்கள் அணி 1.5-2.5 என இத்தொடரில் முதன் முறையாக தோல்வியடைந்தது. இருப்பினும் 14 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது. போலந்து (14), கஜகஸ்தான் (14) அடுத்த இரு இடத்தில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி