வாசகர்கள் கருத்துகள் ( 1 )
God Bless you All . Good luck?
புடாபெஸ்ட்: செஸ் ஒலிம்பியாட் தொடரின் 45வது சீசன் இன்று துவங்குகிறது. இந்திய ஆண், பெண்கள் அணிகள் மீண்டும் பதக்கம் வெல்ல காத்திருக்கின்றன. சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில், இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை செஸ் ஒலிம்பியாட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 45வது சீசன் இன்று முதல் செப். 23 வரை ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடக்க உள்ளது. ஓபன் பிரிவில் 191, பெண்கள் பிரிவில் 180 அணிகள் பங்கேற்க காத்திருக்கின்றன. இந்தியா எப்படிஇந்தியாவை பொறுத்தவரையில் ஒபன் பிரிவில் 'நம்பர்-2' அந்தஸ்துடன் களமிறங்குகிறது. உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க உள்ள குகேஷ், உலகத்தரவரிசையின் 'நம்பர்-4' வீரர் அர்ஜுன் எரிகைசி, 'நம்பர்-12' ஆக உள்ள பிரக்ஞானந்தா, விதித் குஜ்ராத்தி, ஹரிகிருஷ்ணா என இளமை, அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் களமிறங்குகிறது. ஓபன் பிரிவில் 'நம்பர்-1' ஆக உள்ள அமெரிக்கா அணியில் சோ வெஸ்லே, லெவான் ஆரோனியன் என அனுபவ வீரர்கள் இருப்பது இந்தியாவுக்கு சவாலாக அமையலாம். வைஷாலி நம்பிக்கைபெண்கள் பிரிவில் இந்தியா 'நம்பர்-2' அந்தஸ்து பெற்றுள்ளது. வைஷாலி, இளம் வீராங்கனை திவ்யா, வந்திதா, ஹரிகா, அனுபவ தானியா இடம் பெற்றுள்ளனர். ஜார்ஜியா, போலந்து, சீன அணிகள் இந்தியாவுக்கு தொல்லை தரலாம். 98 ஆண்டுக்குப் பின்...செஸ் ஒலிம்பியாட் தொடர் 98 ஆண்டுக்குப் பின், மீண்டும் ஹங்கேரியில் நடக்க உள்ளது. இதற்கு முன், 1926ல் இங்கு இத்தொடர் நடந்தது. 2 வெண்கலம்செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணி, ஓபன் பிரிவில் 2014 (நார்வே), 2022 (சென்னை) என இரு முறை வெண்கலம் வென்றது. * ஆன்லைனில் நடந்த தொடரில் 2020ல் தங்கப்பதக்கத்தை ரஷ்யாவுடன் பகிர்ந்து கொண்டது. 2021ல் வெண்கலம் வென்றது.* பெண்கள் பிரிவில் 2022ல் இந்தியா வெண்கலம் வென்றது.
God Bless you All . Good luck?