மேலும் செய்திகள்
அர்ஜுன் 6வது இடம்: 'பிரீஸ்டைல்' செஸ் தொடரில்
21-Jul-2025
செயின்ட் லுாயிஸ்: அமெரிக்காவில் சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ், பிரக்ஞானந்தா என இருவர் உட்பட மொத்தம் 10 பேர் பங்கேற்கின்றனர். இதன் இரண்டாவது சுற்று போட்டி நடந்தன. முதல் சுற்றில் பிரக்ஞானந்தாவிடம் தோற்ற குகேஷ், இம்முறை உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக்கை சந்தித்தார். இதில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார் குகேஷ். 34 நகர்த்தல் வரை போட்டி சமநிலையில் இருந்தது. 37 வது நகர்த்தலில் குகேஷ் ஆதிக்கம் செலுத்தினார். முடிவில் 50வது நகர்த்தலில் குகேஷ் வெற்றி பெற்றார்.பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பேபியானோ மோதிய போட்டி 37 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. இரண்டு சுற்று முடிவில் அமெரிக்காவின் ஆரோனியன், பிரான்சின் அலிரேசா, பிரக்ஞானந்தா தலா 1.5 புள்ளியுடன் 'டாப்-3' இடத்தில் உள்ளனர். குகேஷ் (1.0) 8வது இடத்துக்கு முன்னேறினார்.
21-Jul-2025