உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி

செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி

விஜ்க் ஆன் ஜீ: நெதர்லாந்து செஸ் தொடர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.நெதர்லாந்தில் 'டாடா ஸ்டீல்' செஸ் தொடர்( கிளாசிக்கல்) நடக்கிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் 14 வீரர்கள் பங்கேற்கின்றனர். முதல் சுற்றில் வெற்றி பெற்ற உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ், இரண்டாவது சுற்றில் ரஷ்யாவின் விளாடிமிர் பெடோசீவை சந்தித்தார். இப்போட்டி 43 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா, ஹரி கிருஷ்ணாவை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 55 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதிய போட்டி 'டிரா' ஆனது. இரண்டு சுற்று முடிவில் காருணா (அமெரிக்கா), குகேஷ், நாடிர்பெக் (அஜர்பெய்ஜான்), பிரக்ஞானந்தா தலா 1.5 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளனர். மற்ற இந்திய வீரர்கள் ஹரிகிருஷ்ணா (1.0) 8, அர்ஜுன் (0.5) 11வது இடங்களில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை