உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / குகேஷ்-டிங் லிரென் டிரா * உலக செஸ் சாம்பியன்ஷிப்பில்...

குகேஷ்-டிங் லிரென் டிரா * உலக செஸ் சாம்பியன்ஷிப்பில்...

சிங்கப்பூர்: குகேஷ், டிங் லிரென் மோதிய உலக செஸ் 9வது சுற்று 'டிரா' ஆனது.சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. கேண்டிடேட்ஸ் தொடரில் வென்ற உலகின் 'நம்பர்---5' இந்தியாவின் குகேஷ் 18, நடப்பு உலக சாம்பியன், உலகின் 'நம்பர்---15' சீனாவின் டிங் லிரென் 32, விளையாடுகின்றனர்.மொத்தம் 14 சுற்று நடக்கும். முதலில் 7.5 புள்ளி பெறும் வீரர், உலக சாம்பியன் ஆகலாம். முதல் எட்டு சுற்று முடிவில், இருவரும் தலா 4.0 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். நேற்று ஒன்பதாவது சுற்று நடந்தது. இந்தியாவின் குகேஷ், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். துவக்கத்தில் இருந்தே இருவரும் சம பலத்தில் விளையாடினர். முடிவில், 54 வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது. கடைசியாக நடந்த ஆறு சுற்றும் தொடர்ந்து 'டிரா' ஆனது. உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் 13வது முறையாக இதுபோல நடந்தது. ஒன்பது சுற்று முடிவில் குகேஷ் 4.5, டிங் லிரென் 4.5 புள்ளியுடன் சமமாக உள்ளனர். இன்று ஓய்வு நாள். நாளை குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாட உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை