உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / போல்ட் சாதனை முறியடிப்பு: சீன ரோபோ அசத்தல்

போல்ட் சாதனை முறியடிப்பு: சீன ரோபோ அசத்தல்

பீஜிங்: ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் சாதனையை (100 மீ., ஓட்டம்), சீன 'ரோபோ' முறியடித்துள்ளது.சீனாவின் பீஜிங் நகரில், உலக மனித உருவ 'ரோபோ' விளையாட்டு 2வது சீசன் நடக்கிறது. இதில் தடகளம், கால்பந்து, டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை உள்ளிட்ட 30 வகையான விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 2,056 'ரோபோ'க்கள் பங்கேற்கின்றன.இதில், 100 மீ., ஓட்டத்தில் பங்கேற்ற சீன 'ரோபோ', இலக்கை 9.32 வினாடியில் கடந்தது. இதன்மூலம் ஜமைக்கா தடகள வீரர் உசைன் போல்ட், 100 மீ., ஓட்டத்தில் படைத்த 16 ஆண்டு கால உலக சாதனையை முறியடித்தது. கடந்த 2009ல் பெர்லினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் 100 மீ., ஓட்டத்தில் அசத்திய போல்ட், பந்தய துாரத்தை 9.58 வினாடியில் கடந்து உலக சாதனை படைத்திருந்தார். போல்ட்டை விட, 0.26 வினாடி அதிவேகமாக இலக்கை அடைந்தது 'ரோபோ'.பின், 400 மீ., ஓட்டத்தில் பங்கேற்ற சீன 'ரோபோ', பந்தய துாரத்தை 38.15 வினாடியில் கடந்து உலக சாதனை படைத்தது. இதற்கு முன் 2016ல் நடந்த ரியோ ஒலிம்பிக் 400 மீ., ஓட்டத்தில் தென் ஆப்ரிக்காவின் வான் நிகெர்க், இலக்கை 43.03 வினாடியில் கடந்து உலக சாதனை படைத்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை