உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / தீக் ஷா தேசிய சாதனை: 1500 மீ., ஓட்டத்தில்

தீக் ஷா தேசிய சாதனை: 1500 மீ., ஓட்டத்தில்

லாஸ் ஏஞ்சல்ஸ்: பெண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் தீக் ஷா புதிய தேசிய சாதனை படைத்தார்.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சர்வதேச தடகள போட்டி நடந்தது. பெண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தின் பைனலில் இந்தியாவின் தீக் ஷா 25, பங்கேற்றார். இலக்கை 4 நிமிடம், 4.78 வினாடியில் கடந்து மூன்றாவது பிடித்த உ.பி., வீராங்கனை தீக் ஷா வெண்கலம் வென்றார். இதன்மூலம் தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்த இவர், புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன் 2021ல் வாராங்கலில் (தெலுங்கானா) நடந்த தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஹர்மிலன் பெயின்ஸ் (4 நிமிடம், 05.39 வினாடி) தேசிய சாதனை படைத்திருந்தார். கடந்த ஆண்டு ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த தேசிய 'இன்டர்-ஸ்டேட்' தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பந்தய துாரத்தை 4 நிமிடம், 06.07 வினாடியில் கடந்தது தீக் ஷாவின் சிறந்த செயல்பாடாக இருந்தது.பெண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் பருல் சவுத்தரி (15 நிமிடம், 10.69 வினாடி) 5வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனை அன்கிதா (15 நிமிடம், 28.88 வினாடி) 10வது இடத்தை கைப்பற்றினார்.ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் (13 நிமிடம், 20.37 வினாடி) 2வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் குல்வீர் சிங் இலக்கை 13 நிமிடம், 31.95 வினாடியில் கடந்தார்.ஆண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் கார்த்திக் குமார் (28 நிமிடம், 07.66 வினாடி) 2வது இடம் பிடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ